TNPSC Thervupettagam
June 2 , 2020 1512 days 605 0
  • சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஓர் அரிய விண்வெளிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தப் பொருளானது குறுங்கோள் மற்றும் வால்மீன் ஆகியவற்றைப் போன்று காணப் படுகின்றது.
  • இந்தப் புதிய பொருள் ஒரு “செயல்படும் குறுங்கோள்” என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்தக் குறுங்கோள் “2019 LD2” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது குறுங்கோளைப் போன்ற ஒரு சுற்றுவட்டப் பாதையையும் வால்மீனைப் போன்ற ஒரு வாலையும் கொண்டுள்ளது.
  • 2019 LD2 ஆனது வியாழனின் சுற்றுவட்டப் பாதையைப் பகிர்ந்து கொள்கின்றது. இது “வியாழன் ட்ரோஜன்கள்” என்று அழைக்கப்படும் குறுங்கோள் திரளின் ஒரு பகுதியாகும்.
  • வால் நட்சத்திரத்தைப் போன்று வாயுவை உமிழும் ஒரு விண்வெளிப் பொருள் கண்டுபிடிக்கப் படுவது இதுவே  முதல்முறையாகும்.
  • இந்தக் குறுங்கோளானது குறுங்கோள் நில அமைப்பு விளைவு இறுதி எச்சரிக்கை அமைப்பினால் (ATLAS - Asteroid Terrestrial-impact Last Alert System) கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்