TNPSC Thervupettagam
November 5 , 2019 1728 days 599 0
  • 2019 ஆம் ஆண்டின் சமபங்கு அதிகாரம் மற்றும் மேம்பாட்டிற்காக அறிவியல் (SEED - Science For Equity Empowerment and Development) என்ற விருதிற்குப் பதினான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • 2002 ஆம் ஆண்டில் ஜோஹன்னஸ்பர்க்கில் நடத்தப்பட்ட நீடித்த வளர்ச்சி மீதான உலக உச்சி மாநாட்டின் போது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UN Environment), ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme - UNDP) மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN) ஆகியவற்றால் SEED விருது நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டின் பிரிவுகள் SEED குறைந்த கார்பன், SEED ஆப்பிரிக்க விருதுகள், SEED தென்னாப்பிரிக்க காலநிலைத் தழுவல் விருதுகள் மற்றும் SEED பாலின சமத்துவ விருது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
  • SEED குறைந்த கார்பன் பிரிவின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ள ஐக்யா ஆர்கானிக்ஸ் என்ற அமைப்பானது இந்தியாவில் இருந்து இந்த விருதை வென்றுள்ளது.
  • ஐக்கியா என்ற அமைப்பைத் தவிர, ஸ்டோன்சூப், ஆரோஹனா சுற்றுச்சூழல் சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் தீர்வுகள் மற்றும் விவசாயிகள் புதிய மண்டலம் போன்றவை உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இந்தியாவில் இருந்து இந்த விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்