TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு

October 12 , 2019 1752 days 712 0
  • எத்தியோப்பியப் பிரதமரான அபி அகமது 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
  • அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவருடைய முயற்சிகளுக்காகவும் அண்டை நாடான எரித்திரியாவுடனான நீண்டகால மோதலைத் தீர்ப்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • எத்தியோப்பியாவும் எரித்திரியாவும் 1998 முதல் 2000 வரை தங்களுடைய எல்லையில் போரில் ஈடுபட்டன. நீண்ட காலப் பகையாளிகளான இந்த இரு நாடுகளுக்கிடையே  விரோதமானது பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
  •  2018 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று, எரித்திரியாவின் தலைநகரான அஸ்மாராவில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பைத் தொடர்ந்து, அபி அகமது மற்றும் எரித்திரிய அதிபர் இசையஸ் அஃப்வெர்கி ஆகியோர் கடந்த 20 ஆண்டுகால மோதலை முறையாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்