TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு - மேற்கு வங்காளத்தின் காட்சிப்படம்

January 24 , 2019 2005 days 594 0
  • 2019 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பிற்காக மேற்கு வங்காள மாநிலத்தின் அணிவகுப்புக்கான காட்சிப் படத்தின் கருத்துருவான "காந்தி – தாகூரின் ஒற்றுமையை" மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
  • மேற்கு வங்க மாநிலத்தின் காட்சிப் படமானது "பெலிகாத்தாவில் சாந்தி நிகேதன் மற்றும் காந்தி" என்ற கருத்துருவுடன் காந்தி மற்றும் இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இரு தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது.
  • 1915 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷியாமொலி இல்லத்தில் மகாத்மா காந்தி தாகூரை சந்தித்ததன் நினைவாக இக்கருத்துருவை மேற்கு வங்க மாநில முதல்வர் வெளியிட்டார்.
பின்ணனி
  • குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்புக் காட்சிப் படத்தின் கருத்துருவை இந்திய பாதுகாப்புப் படை தேர்ந்தெடுத்தது இதுவே முதல்முறையாகும்.
  • காந்தியின் 150வது பிறந்த தினத்தின் நினைவாக "காந்திஜி" என்ற கருத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்