TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு

October 7 , 2019 1783 days 519 0
  • செல்கள் ஆக்ஸிஜன் இருப்பதை எப்படி உணர்ந்து, அதற்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பது குறித்த ஆய்விற்காக பிரிட்டனின் பீட்டர் ராட்க்ளிஃப் மற்றும் அமெரிக்காவின் வில்லியம் கெலின் & கிரெக் செமென்சா ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.
  • உயிரணு வளர்சிதை மாற்றத்தை ஆக்ஸிஜன் அளவுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த புரிதலை இந்தக் குழு ஆய்வு செய்து வெளிப்படுத்தியது.
  • ஆக்ஸிஜனின் மாறுபட்ட நிலைகளுக்கு ஏற்ப மரபணுக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு அமைப்புகளை இவர்கள் அடையாளம் கண்டனர்.
  • புற்றுநோய், இரத்த சோகை மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகளைப் புரிந்து கொள்ள இது வழி வகுத்துள்ளது.
  • அவர்களது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது உயிரணுக்களில் ஆக்ஸிஜன் அளவை செயல்படுத்துவதன் மூலம் அல்லது தடுப்பதன் மூலம் “நோய் நிலைகளில்” ஈடுபடக் கூடிய மருந்துகளை உருவாக்கும் முயற்சியில்  இறங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்