TNPSC Thervupettagam

2019 – ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்

July 15 , 2019 1833 days 759 0
  • இறுதிப் போட்டி மற்றும் சிறப்புப் பந்து வீச்சு (Super Over) ஆகியவற்றில் ஆட்டம் சமநிலை அடைந்ததற்குப் பிறகு எல்லைத் தாண்டிய ஓட்டங்களின் (Boundaries) மொத்த எண்ணிக்கையில் நியூசிலாந்தை வீழ்த்தி 2019 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது.
  • நியூசிலாந்து அடித்திருந்த எல்லைத் தாண்டிய ஓட்டங்களை (17) விட அதிகமாக இங்கிலாந்து அணி அதிகமாக (26) அடித்திருந்ததால் அந்த அணி வெற்றி பெற்றது.
  • தொடரின் நாயகனாக கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) தேர்ந்தெடுக்கப் பட்டார்.
    • இவர் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்களை (578) எடுத்த அணித் தலைவரானார்.

பிற தகவல்கள்

  • இது உலகக் கோப்பையின் 12வது பதிப்பாகும்.
  • இது மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.
  • இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றால் இணைந்து நடத்தப் பட்டிருக்கும் ஐந்தாவது உலகக் கோப்பைப் போட்டி இதுவாகும்.
  • ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முடிவை சிறப்புப் பந்துவீச்சு (சூப்பர் ஓவர்) மூலம் தீர்மானிப்பது இதுவே முதன்முறையாகும்.
  • இங்கிலாந்து அணியானது 2010 உலக டி20 ஐசிசி சாம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து 2வது ICC சாம்பியன்ஷிப்பையும் தனது  முதலாவது உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.
  • உள்நாட்டில் நடைபெற்ற போட்டியில் உலகக் கோப்பையை வென்ற 3-வது அணியாக இங்கிலாந்து ஆகியுள்ளது (போட்டியை நடத்திய நாடே போட்டியை வென்ற நாடு என்ற வகையில்).
  • மற்ற நாடுகள் – 2011 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்