2015-ஆம் ஆண்டின் பருவநிலை மாறுபாடு மீதான பாரிஸ் உடன்படிக்கைக்கான (Paris Agreement on Climate Change) பணி பொறுப்புடைமை ஏற்புகளை (commitments) மதிப்பாய்வு செய்வதற்காக 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பருவநிலை மாநாடு (climate summit) நடைபெறும் என ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் (Antonio Guterres) அறிவித்துள்ளார்.
இலத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான ஐநா பொருளாதார கமிஷனின் (UN Economic Commission for Latin America and the Caribbean) 37-வது அவை கூடுகையில் தொடக்க நிகழ்வின் போது அந்தோனியோ குத்தேரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தோனியோ குத்தேரஸ் முன்னாள் நியூயார்க் நகர மேயரான மைக்கேல் புளூம்பெர்க்கினை (Michael Bloomberg) பருவநிலை செயல்பாடுகளுக்கான தன்னுடைய சிறப்பு தூதராக (Special Envoy for Climate Action) நியமித்தார்.
பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பதற்கான ஐநாவின் செயற் உத்திகளில் (climate strategy) ஐநா அமைப்பிற்கு ஆதரவினை வழங்குவதற்கும், 2019 ஆம் ஆண்டு ஐநாவின் பருவநிலை மாறுபாட்டை நடத்துவதற்கும் இவருக்கு பணிப் பொறுப்பு (climate strategy) வழங்கப்பட்டுள்ளது.