TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளர்களுக்கான ராமானுஜர் விருது

December 16 , 2020 1319 days 791 0
  • இந்த விருதானது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள அசல் மற்றும் பயன்பாட்டுக் கணிதவியல் மையத்தைச் சேர்ந்த கணிதவியலாளரான டாக்டர் கரோலின் அரௌஜோ என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது சர்வதேசக் கோட்பாட்டு இயற்பியல் மையம் மற்றும் சர்வதேசக் கணித ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்டு, வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
  • இவ்விருதானது இயற்கணித வடிவியலில் தலைசிறந்த அவருடைய பணிக்காக வேண்டி அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதைப் பெறும் இந்தியாவைச் சேராத முதலாவது கணிதவியலாளர் இவரே ஆவார்.
  • டாக்டர் அரௌஜோ அவர்கள் சர்வதேசக் கணித ஒன்றியத்தில் கணிதத்திற்கான பெண்கள் குழுவின் துணைத் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்