TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக்கின் ’குறிக்கோள்

February 18 , 2020 1744 days 665 0
  • ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் டோக்கியோ ஒருங்கிணைப்புக் குழுவானது “உணர்ச்சிகளின் மூலம் ஒருங்கிணைதல்” என்ற ஒரு அதிகாரப்பூர்வ குறிக்கோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக “உலகளாவிய மதிப்புகள்” மற்றும் “விளையாட்டின் சக்தியை ஒருங்கிணைத்தல்” ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
  • இந்தக் குறிக்கோள் ஆனது பல்வேறு விளையாட்டுப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து அவர்களின் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடும் விதமாக விளையாட்டின் சக்தியை எடுத்துக் காட்டுகின்றது.
  • அலுவல்பூர்வ ஒலிம்பிக் குறிக்கோள் ஆனது “சிட்டியஸ், ஆல்டியஸ், ஃபோர்டியஸ்” அல்லது “வேகமான, உயர்ந்த, வலிமையான” என்பதாகும். ஆனால் இந்த விளையாட்டை நடத்தும் ஒவ்வொரு நகரமும் இந்த விளையாட்டுகளின் பதிப்போடு சேர்ந்து அதன் சொந்த குறிக்கோளைத் தேர்வு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்