இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Meteorological Department - IMD) 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
IMD ஆனது முக்கியமாக வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்குதல் மற்றும் புயல்களின் உருவாக்கம் குறித்தத் தகவல்களை அளிக்கின்றது.
வட இந்தியப் பெருங்கடல் பகுதியானது மலாக்கா நீர்ச் சந்தி, அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
IMDயின் தகவல்படி, 2020 ஆம் ஆண்டானது 1901 ஆம் ஆண்டு முதல் மிகவும் வெப்பமான 8வது ஆண்டாகும்.
கடந்த பத்தாண்டு காலத்தில், 2019-20 ஆண்டானது மிகுந்த வெப்பமான ஆண்டாகப் பதிவாகியது.
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை கடுமையான வானிலையின் காரணமாக மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
2020 ஆம் ஆண்டில் இடி மற்றும் மின்னல் காரணமாக 215 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வருடாந்திர சராசரி புவிமேற்பரப்பு வெப்ப நிலையானது வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
உலக வானிலை அமைப்பின்படி, உலக சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது +1.2oC என்ற அளவில் அதிகமாகப் பதிவாகியது.
தென்மேற்குப் பருவக் காற்றின் போது பெய்த மொத்த மழைப் பொழிவானது வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
1961 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கிடையே கணக்கிடப்பட்ட நீண்ட கால சராசரி அளவு 109% ஆகும்.
2020 ஆம் ஆண்டில் 5 புயல்கள் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகின.
ஆம்பன், புரெவி, நிசர்கா, நிவர் மற்றும் கதி ஆகியவை அந்த 5 புயல்களாகும்.
இந்தப் புயல்களில் நிசர்கா மற்றும் கதி ஆகியவை அரபிக் கடலிலும் மற்றவை வங்காள விரிகுடாவிலும் உருவாகின.