TNPSC Thervupettagam

2020-2025ற்கான நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி

August 29 , 2020 1552 days 640 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட இருக்கும் நிதியியல் கல்விக்கான தேசிய உத்தியை வெளியிட்டுள்ளது.
  • இந்த பல்துறைசார் அணுகுமுறையானது நிதியியல் விழிப்புணர்வு சார்ந்த மற்றும் அதிகாரமிக்க இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இரண்டாவது NSFE (National strategy for financial education) ஆகும். முதலாவது NSFE ஆனது 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இது பின்வரும் 4 நிதியியல் துறை ஒழுங்குமுறைகளின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
    • இந்திய ரிசர்வ் வங்கி
    • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
    • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்
    • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்