TNPSC Thervupettagam

2020-21 ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் பதிவான பண வருகை

July 23 , 2022 728 days 363 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2020-21 ஆம் ஆண்டிற்கான பண வருகை குறித்த ஐந்தாவது சுற்றுக் கணக்கெடுப்பினை நடத்தியது.
  • 2016-17 ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பப் படும் பணத்தின் பங்கு 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 30% ஆகக் குறைந்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவை விட அமெரிக்காவிலிருந்து அதிகளவில் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 23% சதவீத அளவிற்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பண வரவில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அனுப்பப் படும் பணத்தின் அளவு 17-18% ஆகும்.
  • பாரம்பரியமாக பண வரவினைப் பெற்று வரும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பங்கு 2020-21 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து உள்ளது.
  • 2016-17 ஆம் ஆண்டில் 42 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பதிவான இந்தப் பண வரவானது 25% மட்டுமே ஆகும்.
  • பண வரவினைப் பெறுவதில் கேரளாவை விஞ்சி மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் பதிவான மொத்தப் பண வரவில் 35% மகாராஷ்டிராவின் பங்களிப்பு என்று இந்த அறிக்கை காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்