TNPSC Thervupettagam

2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

January 15 , 2021 1284 days 500 0
  • மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமானது 2020-21 நிதியாண்டிற்கான முதலாவது மேம்படுத்தப் பட்ட கணிப்பை  (First Advance Estimates - FAE) வெளியிட்டுள்ளது.
  • தேசிய வருமானத்தின் மேம்படுத்தப்பட்ட கணிப்பானது இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புள்ளியியல் அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • GDP என்பது ஒரு நிதியாண்டில் ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறுதிநிலை சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும்.
  • இதன்படி, 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் GDP ஆனது 7.7% ஆகக் குறைய இருக்கின்றது.
  • இந்தக் குறைதலானது வேளாண் துறையைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு இருக்கின்றது.
  • 2021-21 நிதியாண்டில் இந்திய உற்பத்தித் துறையானது 9.4% என்ற அளவிற்குக் குறைய இருக்கின்றது, அதே நேரத்தில் வேளாண் துறையானது 3.4% என்ற அளவில் வளர்ச்சியடையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 2019-20 நிதியாண்டில் 4.2% வளர்ச்சியானது பதிவு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்