TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு

October 7 , 2020 1389 days 603 0
  • 2020 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசின் ஒரு பாதியானது ரோஜர் பென்ரோஸ் என்பவருக்கும் அதன் மற்றொரு பாதியானது ஆண்டிரியா கெஸ் மற்றும் ரெய்ன்ஹார்டு ஜென்ஜெல் ஆகியோருக்கும் கூட்டாக வழங்கப் படுகின்றது.
  • இந்த விருதானது அந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர்களுடைய புகழ்பெற்ற கருந்துளை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப் படுகின்றது.
  • முதன்முதலில் இந்த விருதானது 1901 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டதிலிருந்து  தற்பொழுது வரை சமீபத்திய வெற்றியாளரான ஆண்டிரியா கெஸ் உள்ளிட்ட 4 பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகள்

  • பென்ரோஸ்: கருந்துளை உருவாக்கம் என்பது சார்பியலின் பொதுக் கோட்பாட்டிற்கான ஒரு வலுவான கணிப்பு என்பது குறித்த ஒரு கண்டுபிடிப்பாகும்.
  • கெஸ் மற்றும் ஜென்ஜெல் : கண்ணுக்குப் புலப்படாத மற்றும் மிகவும் கடுமையான பொருளானது நமது விண்மீனின் மையத்தில் நட்சத்திரங்களின் சுற்று வட்டப் பாதையை நிர்வகிக்கின்றது. ஒரு மிகப்பெரிய கருந்துளை என்பது மட்டுமே  நமக்கு தற்பொழுது மிகவும் அறிந்த ஒரு தகவலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்