TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் உலகளாவிய காற்றின் நிலை குறித்த அறிக்கை

October 28 , 2020 1494 days 559 0
  • உலகளாவிய காற்றின் நிலை என்பது பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்திடமிருந்து பெற்ற நிபுணத்துவத் தரவுகளுடன் சுகாதாரத் தாக்கங்கள் மையம்,  சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் நுண்மத் துகள் 2.5 என்ற துகளின் மிக அதிகப் பாதிப்புக்கு உள்ளான முதல் 10 நாடுகளில் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உள்ளடங்கும்.
  • 2019 ஆம் ஆண்டில் மிக அதிக அளவில் ஓசோன் பாதிப்புக்குள்ளான முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • ஒட்டு மொத்தமாக, இந்தியாவில் அனைத்து சுகாதார அபாயங்களிடையே நிகழும் இறப்புகளுக்கான ஒரு மிகப் பெரிய அபாயக் கூறாக காற்று மாசுபாடு விளங்கி வருகின்றது.
  • இந்தியாவானது உலகில் மிக அதிகமான மாசுபாடு பாதிப்பு, அதாவது 83.2 μg /கன மீட்டர் என்ற அளவிற்குப் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து நேபாளம் 83.1 μg /கன மீட்டர் பாதிப்பையும் நைஜீரியா 80.1% பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்