நியூயார்க்கை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தக வெளியீடான குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) உலகின் பாதுகாப்பான வங்கிகளின் 29வது ஆண்டு தரவரிசையை அறிவித்துள்ளது.
டிபிஎஸ் வங்கி தொடர்ச்சியாக 12வது ஆண்டாக 'ஆசியாவின் பாதுகாப்பான வங்கி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், உலகின் பாதுகாப்பான வணிக வங்கியாக டிபிஎஸ் வங்கி 4வது இடத்தில் உள்ளது.
இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
உலகின் பாதுகாப்பான வங்கிகள் 2020: கே.எஃப்.டபிள்யூ, ஜெர்மனி (முதலிடம்), ஜூச்சர் கன்டோனல் வங்கி, சுவிட்சர்லாந்து (இரண்டாம் இடம்) மற்றும் பி.என்.ஜி வங்கி, நெதர்லாந்து (மூன்றாம் இடம்) ஆகும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவானது இந்திய நாட்டின் பாதுகாப்பான வங்கியாகும்.