TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுகாதாரச் சவால்கள்

January 16 , 2020 1682 days 575 0
  • உலக சுகாதார நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுகாதாரச் சவால்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலானது 13 சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளது. இதில் முதன்மையான அச்சுறுத்தல் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR - Anti-Microbial Resistance) மற்றும் காலநிலை நெருக்கடி ஆகியவையாகும்.
  • காலநிலை மாற்றமானது ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதிகரித்துள்ளது. இது மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதலைத் தூண்டுகின்றது.
  • இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி, மலேரியா & காசநோய் போன்ற தொற்று நோய்களின் பரவுதல் ஆகியவை இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ள மற்ற அச்சுறுத்தல்கள் ஆகும்.
  • முதல் 13 சாத்தியமான அச்சுறுத்தல்களின் பட்டியலில் சுகாதார வசதிகளை அணுகுவதில் ஏற்படும் குறைபாடானது புதிதாக இணைந்துள்ளது.
  • சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையும் உலகளாவில் முக்கியப் பிரச்சினையாக விளங்குகின்றது.
  • மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளுடன் சேர்த்து ஆரோக்கியமற்ற உணவு வகைகளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. உணவுப் பற்றாக்குறை, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பாதுகாப்பற்ற உணவு ஆகியவை உலகளாவிய நோய்ச் சுமைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்