TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இடம்பெயர்வு சிறப்பம்சங்கள்

January 20 , 2021 1334 days 735 0
  • ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் “2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இடம்பெயர்வு  சிறப்பம்சங்கள்” என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • அந்த அறிக்கையின்படி, இந்திய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உலகிலேயே மிகப் பெரியதாகும்.
  • 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
  • இவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் (3.5 மில்லியன்), சவுதி அரேபியா (2.5 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (2.7 மில்லியன்) போன்ற பல முக்கிய நாடுகளில் பரவியுள்ளனர்.
  • இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரைக் கொண்ட மற்ற நாடுகள் ஓமன், ஆஸ்திரேலியா, குவைத், கனடா, கத்தார், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகும்.
  • மெக்ஸிகோ, சீனா, ரஷ்யா மற்றும் சிரியா ஆகியவை அதிகளவில் புலம்பெயர்ந்தோர் மக்களைக் கொண்ட மற்ற இதர நாடுகளாகும்.
  • சர்வதேச புலம்பெயர்ந்தோரின் மையமாக அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நாடு அமெரிக்கா ஆகும்.
  • அதைத் தொடர்ந்து ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்