TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை

January 10 , 2021 1420 days 770 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Meteorological Department - IMD) 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • IMD ஆனது முக்கியமாக வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்குதல் மற்றும் புயல்களின் உருவாக்கம் குறித்தத் தகவல்களை அளிக்கின்றது.
  • வட இந்தியப் பெருங்கடல் பகுதியானது மலாக்கா நீர்ச் சந்தி, அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • IMDயின் தகவல்படி, 2020 ஆம் ஆண்டானது 1901 ஆம் ஆண்டு முதல் மிகவும் வெப்பமான 8வது ஆண்டாகும்.
  • கடந்த பத்தாண்டு காலத்தில், 2019-20 ஆண்டானது மிகுந்த வெப்பமான ஆண்டாகப் பதிவாகியது.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை கடுமையான வானிலையின் காரணமாக மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இடி மற்றும் மின்னல் காரணமாக 215 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வருடாந்திர சராசரி புவிமேற்பரப்பு வெப்ப நிலையானது வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
  • உலக வானிலை அமைப்பின்படி, உலக சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது +1.2oC என்ற அளவில் அதிகமாகப் பதிவாகியது.
  • தென்மேற்குப் பருவக் காற்றின் போது பெய்த மொத்த மழைப் பொழிவானது வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
  • 1961 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கிடையே கணக்கிடப்பட்ட நீண்ட கால சராசரி அளவு 109% ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் 5 புயல்கள் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகின.
  • ஆம்பன், புரெவி, நிசர்கா, நிவர் மற்றும் கதி ஆகியவை அந்த 5 புயல்களாகும்.
  • இந்தப் புயல்களில் நிசர்கா மற்றும் கதி ஆகியவை அரபிக் கடலிலும் மற்றவை வங்காள விரிகுடாவிலும் உருவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்