இஞ்சினுயுட்டி (புத்திக் கூர்மை என்று பொருள்) என்பது ஒரு தானியங்கி வானூர்தி (ரோபோ ஹெலிகாப்டர்) ஆகும். இது 2020 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் நிலைமைகள் வானூர்திப் பயணத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது சோதனை செய்யும்.
மற்றொரு கிரகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட விமானப் போக்குவரத்தை நிகழ்த்தும் முதல் வானூர்தி இதுவாகும்.
செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வசிக்கக் கூடிய நிலைமைகளின் அறிகுறிகளை 2020 ஆம் ஆண்டின் செவ்வாய் கிரகத் திட்டம் கண்டுணரும்.
இது விடாமுயற்சி (Perseverance) என்று பெயர் கொண்ட ஒரு சுற்றித் திரியும் வாகனத்தையும் (Rover) உடன் கொண்டு செல்லும்.