TNPSC Thervupettagam

2020 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கிற்கான சின்னங்கள்

March 5 , 2018 2456 days 1047 0
  • 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் (Olympic) மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் (Paralympic) போட்டிகளுக்கான சின்னங்களாக (Mascots) அசாத்திய சக்திகளுடைய இரு எதிர்காலத்திய நரி போலான படைப்புகளை (Futuristic Fox-like features with Supernatural Power) ஜப்பான் தேர்ந்தெடுத்துள்ளது.
  • சுமார் 16,769 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 3 சின்ன ஜோடிகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். அதிலிருந்து தற்போது இந்த ஒரு ஜோடி சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

  • கார்ட்டூன் கதாபாத்திர வடிவமைப்பாளரான ரியோ டானிகுச்சி (Ryo Taniguchi) என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சின்னங்களுக்கு இவ்வாண்டின் இறுதியில் பெயர் சூட்டப்பட உள்ளது.
  • ஜப்பான் நாட்டினுடைய “Yoi Don!” எனும் டோக்கியோவின்  2020 ஆண்டிற்கான தேசிய கல்வி திட்டத்தின் ஒருபகுதியாக இந்த சின்னத்தின் தேர்ந்தெடுப்பிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • Yoi Don என்பதன் பொருள் ‘Get Set’ என்பதாகும்.
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆனது 2020 ஆம் ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை நடைபெற உள்ளது. பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறஉள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்