TNPSC Thervupettagam

2020 புவியின் சாதனையாளர்கள் விருது

December 19 , 2020 1442 days 596 0
  • ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமானது இந்த விருதுக்கு ஆறு பரிசு பெற்றவர்களை அறிவித்துள்ளது.
  • இது 2005 ஆண்டு முதல் வழங்கப்படும் ஐ.நா.வின் மிக உயர்ந்த ஒரு சுற்றுச்சூழல் விருதாகும்.
  • இவ்விருது பெற்ற ஆறு பேர் பின்வருவனமாறு,
    • பிஜியின் பிரதமர் பிராங்க் பைனிமராமா
    • டாக்டர் ஃபேபியன் லீண்டெர்ட்ஸ் (ஜெர்மனி)
    • மிண்டி லப்பர் (அமெரிக்கா)
    • நெமண்டே நென்கிமோ (ஈக்வடார்)
    • யாகௌபா சவாடோகோ (புர்கினா பாசோ)
    • ராபர்ட் டி. புல்லார்ட் (அமெரிக்கா)
  • சுற்றுச்சூழல் நீதிக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக ராபர்ட் அவர்களுக்கு புவியின் சாதனையாளர் பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதும் வழங்கப் பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனாவின் குன்மிங்கில் நடைபெற உள்ள ஐ.நா. பல்லுயிர் மாநாட்டிற்கான உத்வேகத்தை திரட்டுவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் #ஃபார்நேச்சர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த விருதுகள் உள்ளன, மேலும் நவம்பர் 2021 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கு வேண்டி அனைத்து வழிகளிலும் இந்த விருதுகள் காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்