TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டின் வனவிலங்குப் புகைப்படவியலாளர்

February 13 , 2021 1260 days 721 0
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வனவிலங்குப் புகைப்படவியலாளரான ராபர்ட் இர்வின் என்பவர் மக்களின் விருப்ப விருதுப் போட்டியில் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படவியலாளர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து பரிசை வென்றுள்ளார்.
  • காட்டுத் தீ” என்ற தலைப்பு கொண்ட ஒரு புகைப்படத்திற்காக இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
  • இது 2020 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ஆஸ்திரேலியக் காட்டுத் தீயைக் காட்டும் புகைப்படமாகும்.
  • இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கேப் யோர்க்கில் உள்ள ஸ்டீல் இர்வின் வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகில் ஆளில்லா குட்டி விமானத்தைப் பயன்படுத்தி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
  • இந்தப் புகைப்படமானது புதர்களுக்கிடையே எரிந்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீ ஆனது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கும் ஒரு கோட்டைக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்