TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை விருது

November 23 , 2021 974 days 353 0
  • நடிகரும் பா.ஜ.க. தலைவருமான ஹேமா மாலினி மற்றும் பாடலாசிரியரும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கீட்டு வாரியத்தின்  முன்னாள் தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை என்ற விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருதுகளானது கோவாவில் நடைபெற உள்ள இந்தியாவின் மிகப்பெரிய  விருது வழங்கும் விழாவான 52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் (2021) வழங்கப்பட உள்ளது.
  • இந்த ஆண்டில், ஹாலிவுட்டின் பிரபலமான  மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) மற்றும் ஹங்கேரியத் திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ (Istevan Szabo) ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதானது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்