TNPSC Thervupettagam
May 15 , 2021 1168 days 797 0
  • டாக்டர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட் (Dr Shakuntala Haraksingh Thilsted) என்பவர் 2021 ஆம் ஆண்டிற்கான உலக உணவுப் பரிசினைப் பெற்றுள்ளார்.
  • இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணராவார்.
  • மீன்வளர்ப்பு மற்றும் உணவு முறைகளில் முழுமையான, ஊட்டச்சத்து நுண்ணுணர்வுடைய அணுகுமுறைகளை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட மகத்தான ஆராய்ச்சிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • உலக உணவுப் பரிசானது உணவு மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • உலக உணவுப் பரிசானது கடந்த ஆண்டிலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கே வழங்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் உலக உணவுப் பரிசானது இந்தியாவில் பிறந்து வளர்ந்த டாக்டர் ரத்தன் லால் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இயற்கை வளங்களையும் பாதுகாத்து காலநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகு முறையை உருவாக்கியதற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • உலக உணவுப் பரிசானது 1986 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற நார்மன் போர்லாஹ் என்பவரால் உருவாக்கப் பட்டது.
  • தற்சமயம் இது உலக உணவுப் பரிசு அறக்கட்டளை அமைப்பினால் வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்