20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையின் 2021 ஆண்டுப் போட்டிகளை ரத்து செய்ய ஃபிஃபா முடிவு செய்துள்ளது.
இது 2023 ஆண்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைகளை முறையே இந்தோனேசியா மற்றும் பெரு நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டிலும், இந்தோனேசியா மற்றும் பெரு நாடுகளே இதை நடத்த இருந்தன.
2023 ஆம் ஆண்டிற்கான ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்துகின்றன.