TNPSC Thervupettagam

2021-2030 காலகட்டத்திற்கான மக்கள்தொகை கொள்கை – உத்தரப் பிரதேசம்

July 14 , 2021 1139 days 849 0
  • உத்தரப் பிரதேச அரசானது உத்தரப் பிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, நிலைப்பாடு மற்றும் நலம்) மசோதா, 2021 என்று தலைப்பிடப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டு  மசோதாவை முன்மொழிந்துள்ளது.
  • 2021-2030 காலகட்டத்திற்கான புதிய மக்கள்தொகை  கொள்கையினையும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
  • இரு குழந்தைகளுக்கு மேல் கொண்டிருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க இந்த மசோதா தடை விதிக்கிறது.
  • மேலும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது பதவி உயர்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் இவர்களுக்குத் தடை விதிக்கப் படுகிறது.
  • மேலும் அரசு மானியங்களைப் பெறுவதற்கும் இவர்களுக்கு அனுமதி கிடையாது.
  • இந்தப் புதிய கொள்கையில் மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு உதவும் நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளன.
  • இரு குழந்தை முறையைப் பின்பற்றும் அரசுப் பணி அதிகாரிகளுக்கு அவர்களின் முழு பணிக்காலத்தின் போது கூடுதலாக இரண்டு சம்பள உயர்வுகள் வழங்கப்படும்.
  • முழு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுடன் கூடிய 12 மாதகால மகப்பேறு அல்லது தந்தைப் பேறு விடுப்பானது அவர்களுக்கு வழங்கப்படும்.
  • மேலும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension Scheme) கீழ், பணியமர்த்துபவர் பங்களிப்பு நிதியில் 3% அதிகரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்