TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டின் புவி நேரம் – மார்ச் 27

March 29 , 2021 1250 days 492 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று புவி நேரம் கொண்டாடப் படுகிறது.
  • பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், ஒரு மேம்பட்ட கோள் எனும் நிலையை அடைவதற்கான செயல்பாட்டிற்கும் ஆதரவு அளிப்பதற்காக வேண்டி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “புவியைக் காப்பதற்கான பருவநிலை மாற்றம்” என்பதாகும்.
  • புவி நேரம் என்பது சர்வதேச இயற்கை நிதியத்தினால் (WWF – World Wide Fund for Nature) ஒருங்கிணைக்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
  • இந்தத் தினமானது இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்காக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரை ஊக்குவிக்கிறது.
  • இது மின் விளக்குகளை அணைத்திடும் ஒரு நிகழ்வாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்