2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான UNCTAD அமைப்பின் அறிக்கையின்படி இது வெளியிடப் பட்டது.
இணைய சங்கேதப் பணங்களைக் கொண்டிருக்கும் மக்கள்தொகையின் பங்கினைப் பொறுத்த வரையில், வளர்ந்து வரும் நாடுகள் முதல் 20 நாடுகளில் 15 நாடுகளைக் கொண்டுள்ளன.
இதில் உக்ரைன் 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ரஷ்யா (11.9 சதவீதம்), வெனிசுலா (10.3 சதவீதம்), சிங்கப்பூர் (9.4 சதவீதம்), கென்யா (8.5 சதவீதம்), அமெரிக்கா (8.3 சதவீதம்) ஆகியவையும் இடம் பெற்று உள்ளன.
இந்தியாவில், 2021 ஆம் ஆண்டின் படி 7.3 சதவீத மக்கள் எண்ணிம நாணயத்தை வைத்துள்ளனர்.
மக்கள்தொகையின் அடிப்படையில் எண்ணிம நாணய உரிமைகளைக் கொண்ட முதல் 20 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.