2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மின்னிலக்க பணவழங்கீட்டுக் குறியீடு
January 22 , 2022 1039 days 426 0
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மின்னிலக்க பணவழங்கீடுகள் 40% என்ற ஒரு அளவிற்கு அதிகரித்துள்ளதாக இந்தக் குறியீடு குறிப்பிடுகிறது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இணையப் பரிவர்த்தனைகளின் குறியீட்டின் மதிப்பானது 304.06 ஆக இருந்தது.
இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 270.59 ஆக இருந்தது.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இணையப் பரிவர்த்தனை மதிப்பானது 217.74 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னிலக்கப் பணவழங்கீட்டுக் குறியீடு என்பது, நாடு முழுவதும் மின்னலக்கப் பணவழங்கீடுகளை ஏற்றுக் கொள்வது மற்றும் அவற்றை உள்ளார்ந்த ஒன்றாக மாற்றுவது ஆகியவற்றில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தொடர்ந்து குறிப்பிடுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னிலக்கப் பணவழங்கீட்டுக் குறியீட்டின் ஒரு அடிப்படை ஆண்டு 2018 ஆகும்.
அதாவது மார்ச் மாதத்திற்கான பண வழங்கீட்டுக் குறியீட்டின் மதிப்பானது 100 ஆக அமைக்கப் பட்டது.
மூன்று ஆண்டுகளில் இந்தக் குறியீட்டு மதிப்பானது 2.7 மடங்கு அதிகரித்துள்ளது.