TNPSC Thervupettagam

2021 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூலிப்பு

April 26 , 2021 1311 days 625 0
  • நிதி அமைச்சகமானது 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் கணக்குகளை சமீபத்தில் வெளியிட்டது.
  • நிதி அமைச்சகத்தின் கூற்றுப் படி, 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வரி வசூல் ரூ.9.45 லட்சம் கோடியாகும்.
  • நேரடி வரி வசூலில் தனிநபர் வருமான வரி வசூல்களும் பெருநிறுவனம் மீதான வரி வசூல்களும் அடங்கும்.
  • 2020-21 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட தனிநபர் வருமான வரியானது ரூ.4.88 லட்சம் கோடியாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட பெரு நிறுவனங்கள் மீதான வரியானது (அல்லது பெருநிறுவன வரி) ரூ.4.57 லட்சம் கோடியாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த நேரடி வரி வசூலானது ரூ.12.06 லட்சம் கோடி ஆகும்.
  • 2021 ஆம் நிதி ஆண்டின் வரி வசூலானது திருத்தியமைக்கப்பட்ட இலக்கினை 5% விஞ்சியுள்ளது.
  • 2021 ஆம் நிதி ஆண்டின் வரி வசூல், அதற்கு முந்தைய நிதி ஆண்டின் வரி வசூலை விட 10% குறைவாகும்.
  • 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்திய அரசு நேரடி வரிகளின் வாயிலாக ரூ.13.19 லட்சம் கோடி வசூலாகும் என கணித்திருந்தது.
  • இருப்பினும், இது கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு கணிக்கப் பட்டது.
  • பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த மதிப்பீடானது ரூ.9.05 லட்சம் கோடியாக குறைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்