2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்கள் தரவரிசை
November 14 , 2022 740 days 366 0
ஃபோர்ப்ஸ் நிறுவனமானது சமீபத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்களின் தரவரிசையை வெளியிட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவின் சிறந்த வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும், உலகளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நிறுவனமாகவும் விளங்குகிறது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் தென் கொரிய திறன்பேசி மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஆல்பாபெட் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்பப் பெரு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, இந்தப் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்துள்ள மற்றும் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் ஆகும்.
இந்தப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் 7 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் உள்ள பிற இந்திய நிறுவனங்கள்: HDFC வங்கி, (137), பஜாஜ் (173), ஆதித்யா பிர்லா குழுமம் (240), லார்சன் & டூப்ரோ (354), ICICI வங்கி (365), HCL டெக்னாலஜிஸ் (455), மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி (499) ஆகியனவாகும்.