TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள்

November 4 , 2023 260 days 237 0
  • இந்தியாவில் கடந்த ஆண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 விபத்துக்கள் மற்றும் 19 உயிரிழப்புகள் அல்லது சராசரியாக 1,264 விபத்துக்கள் மற்றும் தினசரி சாலை விபத்துகளால் 42 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
  • இந்தியா முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையானது 11.9% அதிகரித்துள்ளது மற்றும் உயிரிழப்புகள் 9.4% அதிகரித்துள்ளது.
  • சாலை விபத்துகளின் தீவிரம் ஆனது, 100 விபத்துகளுக்கு எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டில் 28.2% ஆக இருந்த இந்த எண்ணிக்கையானது கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் தொடர் உயர்வுடன் 2022 ஆம் ஆண்டில் 36.5% ஆக அதிகரித்துள்ளது.
  • சாலை விபத்துகள் அதிகம் பதிவான 20 நாடுகளில் 38.15 விபத்து தீவிரத்தன்மையுடன், இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • இந்தியாவைத் தொடர்ந்து சீனா (விபத்து தீவிரத்தன்மை 25.22) மற்றும் அமெரிக்கா (விபத்து தீவிரத்தன்மை 2.01) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • சாலை விபத்து இறப்புகளைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 13.4% உயிரிழப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 10.6% மற்றும் மகாராஷ்டிரா 9% ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • பெரும்பாலான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் (1,51,997) நிகழ்ந்துள்ளன.
  • இந்த வகையில் தமிழ்நாடு மாநிலத்தில் தான் அதிக விபத்துகள் பதிவாகியுள்ளன (18,972, மொத்த விபத்துகளில் 12. 5 சதவீதம்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்