TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான கொடுமைகள்

September 27 , 2024 57 days 141 0
  • உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு (SC) எதிராக மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான கொடுமைகள் பதிவாகியுள்ளன என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
  • பட்டியலினச் சாதியினருக்கு எதிரான கொடுமை வழக்குகளில் 97.7 சதவீதம் ஆனது 13 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேசத்தில் 12,287 வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது மொத்த வழக்குகளில் 23.78 சதவீதமாகும்.
  • அதைத் தொடர்ந்து 8,651 வழக்குகளுடன் (16.75 சதவீதம்) இராஜஸ்தான் மற்றும் 7,732 வழக்குகளுடன் (14.97 சதவீதம்) மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன.
  • மிக கணிசமான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகியுள்ள பிற மாநிலங்களாக பீகாரில் 6,799 வழக்குகள் (13.16 சதவீதம்), ஒடிசாவில் 3,576 வழக்குகள் (6.93 சதவீதம்), மற்றும் மகாராஷ்டிராவில் 2,706 வழக்குகள் (5.24 சதவீதம்) உள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவான மொத்த வழக்குகளில் சுமார் 81 சதவிகிதம் ஆனது இந்த ஆறு மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான கொடுமை குறித்த பல வழக்குகளில் பெரும்பாலானவை 13 மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன என்பதை இந்த அறிக்கை மேலும் எடுத்துரைக்கிறது.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சம்பந்தப்பட்ட சுமார் 9,735 வழக்குகளில், மத்தியப் பிரதேசத்தில் 2,979 வழக்குகள் (30.61 சதவீதம்) பதிவாகியுள்ளன.
  • அதைத் தொடர்ந்து இராஜஸ்தானில் 2,498 வழக்குகள் (25.66 சதவீதம்), ஒடிசாவில் 773 வழக்குகள் (7.94 சதவீதம்) பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்