2022 ஆம் ஆண்டு உலக நாடுகளின் பள்ளிகளின் உணவு வழங்கீட்டுத் திட்டங்களின் நிலை
April 7 , 2023 598 days 316 0
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், பள்ளிகளின் உணவு வழங்கீட்டுத் திட்டங்களின் பரவலானது பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைகளை விட நான்கு சதவீதம் குறைவாகவே உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிக அளவிலான சரிவு பதிவாகியுள்ளது.
உயர் வருமானம், மேல்நிலையில் உள்ள நடுத்தர வருமானம் கொண்ட மற்றும் தாழ் நிலை நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஆகிய நாடுகளில் முறையே 4 சதவீதம், 4 சதவீதம் மற்றும் 12 சதவீதம் என்ற சீரான, மிதமான அதிகரிப்பானது பதிவாகி உள்ளன.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் ஆனது 2020 ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்த பள்ளி உணவு வழங்கீட்டுத் திட்டத்திற்கான உள்நாட்டு நிதியை 2022 ஆம் ஆண்டில் 45 சதவீதமாக உயர்த்தியுள்ளன.
பள்ளிகளின் உணவு வழங்கீட்டுத் திட்டங்களின் மூலம் உணவைப் பெறும் ஒவ்வொரு 100,000 குழந்தைகளுக்கும் உணவளிக்கும் அதே சமயத்தில் அது 1,000-2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது.
2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பள்ளிகளின் உணவு வழங்கீட்டுத் திட்டங்களின் மூலம் உணவைப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 30 மில்லியன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் 19 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றன.
176 நாடுகளிலிருந்துச் சேகரிக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வானது மேற்கொள்ளப்படுகிற நிலையில் 2020 ஆம் ஆண்டில் 163 நாடுகளில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.