TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிப்பு

December 9 , 2021 954 days 463 0
  • 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்க அரசு சமீபத்தில் அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
  • "சீனாவின் மனித உரிமை தொடர்பான கொடுமைகளே" தமது புறக்கணிப்பிற்கு ஒரு முக்கியக் காரணம் என்று அமெரிக்கா மேற்கோள் காட்டி கூறியுள்ளது.
  • அமெரிக்கா இந்தப் புறக்கணிப்பிற்கு "இராஜதந்திரம் சார்ந்த  புறக்கணிப்பு" என்று பெயரிட்டுள்ளது.
  • அதாவது, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அமெரிக்கா எந்த அதிகாரப்பூர்வ அல்லது தூதரகப் பிரதிநிதித்துவத்தையும் அனுப்பவில்லை என்று அர்த்தமாகும்.
  • ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அமெரிக்க வீரர்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்து வருகிறது.
  • சீனா மேற்கொள்ளும் பின்வரும் மனித உரிமை மீறல் தொடர்பான அட்டூழியங்ச் செயல்களுக்காக அமெரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை புறக்கணிக்கச் செய்கிறது.
    • தாய்வான் மற்றும் திபெத்தில் நிலவும் சூழ்நிலைகள்
    • ஹாங்காங்கில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை
    • சின்ஜியாங்கில் (Xinjiang) சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம் உய்குர்களை துஷ்பிரயோகம் செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்