TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்பக மதிப்பீடு

April 13 , 2023 465 days 227 0
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது, 2022 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் சுற்று மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டினை மேற்கொண்டது.
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகம் (ATR) மற்றும் முதுமலை புலிகள் வளங்காப்பகம் (MTR) ஆகியவை நாட்டிலுள்ள 51 புலிகள் காப்பகங்களின் மத்தியில் ஐந்தாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெற்றுள்ளன.
  • அவை தங்களது தரவரிசையினை 'சிறந்தவை' என்ற ஒரு நிலையில் இருந்து 'மிகச் சிறந்தவை' என்ற நிலைக்கு மேம்படுத்தியுள்ளன.
  • இவை இரண்டும் 'மிகச் சிறந்தவை' என்ற பிரிவில் உள்ள 12 புலிகள் காப்பகங்களுள் ஒன்றாக இடம் பெற்றுள்ளன.
  • சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகம் மற்றும் களக்காடு & முண்டந்துறை புலிகள் வளங்காப்பகம் ஆகியவை தொடர்ந்து ‘சிறந்தவை’ என்ற பிரிவில் உள்ளன.
  • புதிதாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் வளங்காப்பகம் ஆனது ‘நன்று’ என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்