2022 ஜோசப் A. கஷ்மன் விருது
October 28 , 2021
1001 days
437
- டாக்டர் ராஜிவ் நிகாம், சிறப்பான ஃபோராமினிபெரல் (Foraminiferal) ஆராய்ச்சிக்காக 2022 ஆம் ஆண்டின் ஜோசப் A. கஷ்மன் என்ற விருதிற்குத் தேர்வாகியுள்ளார்.
- இவர் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசியக் கடலியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் ஆவார்.
- டாக்டர் நிகாம், இந்த மதிப்பு மிக்க விருதிற்குத் தேர்வான முதல் இந்தியக் குடிமகன் ஆவார்.
- ஃபோராமினிபெரா (மைக்ரோஃபாசில்) ஆராய்ச்சித் துறையில் இவர் ஆற்றிய சிறப்பான வாழ்நாள் அளவிலான பங்களிப்பிற்காக இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-612.jpg)
Post Views:
437