TNPSC Thervupettagam

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் GSDP

December 14 , 2024 9 days 105 0
  • 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஆனது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 14.16% அதிகரித்துள்ளது.
  • இது முதன்மையாகத் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளால் ஏற்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசியச் சராசரியை விட சுமார் 56% அதிகமாக இருந்தது.
  • ‘மாநில நிதி நிலைமை – தமிழ்நாடு அரசு 2022-2023’ குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கையில் இந்தத் தரவு வெளியிடப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில், சுமார் 15.84% ஆக இருந்த GSDP வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவானது.
  • 2022-23 ஆம் ஆண்டில் நடப்பாண்டு விலையிலான GSDP 23,64,514 கோடி ரூபாயாகவும், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பாண்டு விலையிலான GDP 2,72,40,712 கோடி ரூபாயாகவும் இருந்தது.
  • மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தனிநபர் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3,08,020 ரூபாயாகவும், நாட்டின் தனிநபர் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,96,983 ரூபாயாகவும் இருந்தது.
  • 2018-19 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், வருவாய் வரவுகள் ஆனது 1,73,741 கோடி ரூபாயிலிருந்து 2,43,749 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதோடு, இதன் சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதம் 11.13% ஆகும்.
  • இந்த காலகட்டத்தில் மூலதன வரவு ஆனது 54,850 கோடி ரூபாயிலிருந்து 1,02,182 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் 13.45% ஆக இருந்த வருவாய் வரவுகளில் மானிய நிதி உதவியின் பங்கு 2022-23 ஆம் ஆண்டில் 15.48% ஆக குறைந்துள்ளது.
  • அந்த ஆண்டு மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்காக (CSS) மாநில அரசு 15,270 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காகப் பெற்றது.
  • 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 393 என்ற நிதிப் பயன்பாட்டு முறைகேடு வழக்குகள் பதிவாகின மற்றும் 30.81 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்