பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் வசூலான மொத்த நேரடி வரி வசூலானது, 15.67 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான மொத்த வரி வசூலை விட 24.09 சதவீதம் அதிகமாகும்.
நேரடி வரி வசூல் மற்றும் நிகரத் தொகை திருப்பி செலுத்தியது ஆகியவை 12.98 லட்சம் கோடியாக உள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் பதிவான நிகர வசூலை விட 18.40 சதவீதம் அதிகமாகும்.
இந்த வசூலானது 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த நிதிநிலை மதிப்பீடுகளில் 91.39 சதவீதமாகும் என்பதோடு, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 78.65 சதவீதமாகும்.
நேரடி வரி வருவாயானது 14.2 லட்சம் கோடி ரூபாய் என நிதிநிலை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.