TNPSC Thervupettagam

2022-23 ஆம் நிதியாண்டிற்கான இந்தியக் குறுங்கடன் மறுமதிப்பீடு

November 23 , 2023 367 days 298 0
  • இந்த அறிக்கையானது, இத்துறை குறித்த முழுமையான ஆய்வினை வழங்குவதற்காக 2021 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, ‘சிறிய விவகாரங்கள்: பெரிய அளவிலான ஆய்வு’ என்ற அறிக்கையின் மூன்றாவது பதிப்பாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு 7% வளர்ச்சி அடையும்.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் MSME கடன் வழங்கீட்டில் குறுங்கடன்களின் பங்கு 17.9% ஆக உயர்ந்துள்ளது.
  • காப்பீடு வழங்கீட்டின் பரவலானது தற்போது 4.2% ஆக உள்ள நிலையில்,  மேலும், பாலின வேறுபாடு இல்லாத வகையில் வங்கிக் கணக்கு தொடங்கும் உரிமை தற்போது எங்கும் வழங்கப் படுகிறது.
  • குறுங்கடன் துறையில் (வங்கி சாரா நிதி நிறுவனங்கள் - குறுங்கடன் நிறுவனங்கள், வங்கிகள், சிறு கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்) 2022-23 காலக் கட்டத்தில் 87 லட்சம் புதிய பெண் வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர்.
  • அதன் கடன் நிலுவையானது 729 மாவட்டங்களில் (6.64 கோடி குறைந்த வருமானம் கொண்ட பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப் பட்டது) 3.48 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்