TNPSC Thervupettagam

2022-23 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தி

October 23 , 2023 272 days 234 0
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான மதிப்பீட்டின் படி இந்த பயிர்ச் சாகுபடி ஆண்டில் உணவு தானியம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின்  உற்பத்தியில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளது என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த மதிப்பீட்டின்படி, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தியின் இறுதி மதிப்பீடுகளின் அளவானது 329.68 மில்லியன் டன்னாக உள்ளது.
  • இது முந்தைய ஆண்டைவிட சுமார் 4% அல்லது 14.1 மில்லியன் டன் அதிகம் என்று அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
  • 2012-13 ஆம் ஆண்டில்  257.1 மில்லியன் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தியானது கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியாக உயர்ந்து 2021-22 ஆம் ஆண்டில் 315.6 மில்லியன் டன்களாக உள்ளன.
  • முந்தைய ஐந்தாண்டுகளின் உணவு தானிய உற்பத்தியின் சராசரியை விட 30.8 மில்லியன் டன்கள் அதிகமாக 2022-23 ஆம் ஆண்டின் உணவு தானிய உற்பத்தி  உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் அரிசியின் மொத்த உற்பத்தியானது உச்ச அளவாக 135.75 மில்லியன் டன்களாக மதிப்பிடப் பட்டுள்ளதோடு இது முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 6.28 மில்லியன் டன்கள் அதிகமாகவும் உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் கோதுமை உற்பத்தியானது 110.55 மில்லியன் டன்களாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இது முந்தைய ஆண்டின் கோதுமை உற்பத்தியை விட 2.8 மில்லியன் டன்கள் அதிகம் ஆகும்.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த பருப்பு உற்பத்தியானது, 26 மில்லியன் டன்களாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • கடந்த ஐந்தாண்டுகளின் சராசரி அளவுகளுடன் ஒப்பிடும்போது இது 1.4 மில்லியன் டன்கள் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்