TNPSC Thervupettagam

2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில்துறைக் கணக்கெடுப்பு

October 10 , 2024 13 hrs 0 min 48 0
  • 2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தித் தொழில் துறையில் 1.72 கோடியாக இருந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 7.5 சதவீதம் அதிகரித்து 1.84 கோடியாக அதிகரித்துள்ளது.
  • கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறைகளில் பதிவான வேலைவாய்ப்பு அதிகரிப்பின் அதிகபட்ச விகிதம் இதுவாகும்.
  • உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் அதிக வேலைவாய்ப்பு பதிவாகி உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து ஜவுளி, மூல உலோகங்கள், அணிகலன்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் (இழுவைகள்) மற்றும் பகுதியளவு இழுவை வகையிலான வாகனங்கள் உற்பத்தி தொழில் துறைகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு பதிவாகியுள்ளன.
  • 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 2.49 லட்சமாக இருந்த மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கையானது 2022-23 ஆம் ஆண்டில் 2.53 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டில் முறை சாராத தொழில் துறைகளில் சுமார் 11.13 கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 16.45 லட்சம் அல்லது 1.5 சதவீதம் குறைந்து 10.96 கோடியாக இருந்தது.
  • மொத்த மதிப்புக் கூட்டலின் அடிப்படையில் (GVA), 2022-23 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்தது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்