TNPSC Thervupettagam

2022-23 ஆம் நிதியாண்டின் நேரடி வரி வசூல்

February 16 , 2023 647 days 343 0
  • பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் வசூலான மொத்த நேரடி வரி வசூலானது, 15.67 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது.
  • இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான மொத்த வரி வசூலை விட 24.09 சதவீதம் அதிகமாகும்.
  • நேரடி வரி வசூல் மற்றும் நிகரத் தொகை திருப்பி செலுத்தியது ஆகியவை 12.98 லட்சம் கோடியாக உள்ளது.
  • இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் பதிவான நிகர வசூலை விட 18.40 சதவீதம் அதிகமாகும்.
  • இந்த வசூலானது 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த நிதிநிலை மதிப்பீடுகளில் 91.39 சதவீதமாகும் என்பதோடு, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 78.65 சதவீதமாகும்.
  • நேரடி வரி வருவாயானது 14.2 லட்சம் கோடி ரூபாய் என நிதிநிலை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்