TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்கள் தரவரிசை

November 14 , 2022 612 days 298 0
  • ஃபோர்ப்ஸ் நிறுவனமானது சமீபத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வேலையளிப்பு நிறுவனங்களின் தரவரிசையை வெளியிட்டது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவின் சிறந்த வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும், உலகளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நிறுவனமாகவும் விளங்குகிறது.
  • ஃபோர்ப்ஸ் பட்டியலில் தென் கொரிய திறன்பேசி மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் முதலிடத்தில் உள்ளது.
  • இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஆல்பாபெட் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்பப் பெரு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, இந்தப் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்துள்ள மற்றும் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் ஆகும்.
  • இந்தப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் 7 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் பட்டியலில் உள்ள பிற இந்திய நிறுவனங்கள்: HDFC வங்கி, (137), பஜாஜ் (173), ஆதித்யா பிர்லா குழுமம் (240), லார்சன் & டூப்ரோ (354), ICICI வங்கி (365), HCL டெக்னாலஜிஸ் (455), மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி (499) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்