TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த குற்றங்கள்

December 7 , 2023 225 days 199 0
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையான இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டடது.
  • 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட NCRB அமைப்பானது குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள் (சிசிடிஎன்எஸ்), குற்றப் புள்ளியியல், கைரேகைகள் மற்றும் பயிற்சிப் பிரிவு என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • இது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் மாநில உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்கிறது.
  • NCRBயின் இந்த அறிக்கை, பதிவு செய்யப்பட்ட குற்ற நிகழ்வுகளை மட்டுமே கொண்டு உள்ளதே தவிர, உண்மையில் நிகழ்ந்த குற்ற எண்ணிக்கைகளை அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • பெருநகரங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் (IPC) என்ற விகிதத்தில் கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக அதன் இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் புனே (மகாராஷ்டிரா) மற்றும் ஹைதராபாத் (தெலுங்கானா) ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • அதைத் தொடர்ந்து சென்னை, கோவை, சூரத் ஆகிய நகரங்கள் உள்ளன.
  • ஒட்டு மொத்தப் பாதுகாப்பில் கொல்கத்தா சிறந்து விளங்கும் அதே வேளையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
  • கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 27.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கோயம்புத்தூர் (12.9) மற்றும் சென்னை (17.1) ஆகியவற்றின் எண்ணிக்கைகளை விட அதிகமாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆர்) எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மக்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்துள்ளன.
  • மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதன் முக்கியப் பங்களிப்பாளர்களாக நீடிக்கின்றன.
  • மகாராஷ்டிராவில் விலங்குகள் தாக்குதல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.
  • அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் கடி வழக்குகள் ராஜஸ்தானில் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து முறையே மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
  • இந்தியத் தண்டனைச் சட்ட (IPC) குற்றங்களின் கீழ் அதிக குற்றப் பத்திரிகை பதிவு விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்