TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள்

December 27 , 2024 17 days 66 0
  • தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டில் பதிவான 66,841 சாலை விபத்துகளில் மொத்தம் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான 64,105 விபத்துகளில் 17,884 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் பதிவான 62,685 விபத்துக்களில் மொத்தம் 18,129 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதே சமயம் 2018 ஆம் ஆண்டில் 67,279 பதிவான விபத்துகளில் 18,392 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • தமிழ்நாட்டில், பதிவாகும் ஒவ்வொரு நான்கு விபத்துகளுக்கும் ஒரு உயிரிழப்பு என்பது பதிவாகி வருகிறது, மேலும் 25% விபத்துகள் உயிர்களைப் பலி வாங்கிய விபத்துகளாக மாறியுள்ளன.
  • சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் சுமார் 3,642 விபத்துகளுடன் முதல் இடத்தில் உள்ளன என்பதோடு மேலும் அவை விபத்துகளில் தலா 5.45% பங்கினைக் கொண்டுள்ளன.
  • அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 3,387 விபத்துகளும் (5.07%), திருப்பூரில் 3,292 (4.93%) மற்றும் சேலத்தில் 3,174 (4.75%) விபத்துகளும் பதிவாகியுள்ளன.
  • உயிரிழப்புகளைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு சுமார் 1,040 உயிரிழப்புகளுடன் - 18,074 என்ற மொத்த உயிரிழப்புகளில் 5.75% - கோயம்புத்தூர் முதலிடத்தில் உள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 912 பேர் உயிரிழந்துள்ள நிலையில் (மொத்த உயிரிழப்புகளில் 5.05%), மதுரையில் 864 பேரும் (4.80%), திருப்பூரில் 861 பேரும் (4.76%) மற்றும் சேலத்தில் 787 பேரும் (4.35%) உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்