2022 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான கொடுமைகள்
September 27 , 2024 57 days 139 0
உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு (SC) எதிராக மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான கொடுமைகள் பதிவாகியுள்ளன என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பட்டியலினச் சாதியினருக்கு எதிரான கொடுமை வழக்குகளில் 97.7 சதவீதம் ஆனது 13 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 12,287 வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது மொத்த வழக்குகளில் 23.78 சதவீதமாகும்.
அதைத் தொடர்ந்து 8,651 வழக்குகளுடன் (16.75 சதவீதம்) இராஜஸ்தான் மற்றும் 7,732 வழக்குகளுடன் (14.97 சதவீதம்) மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன.
மிக கணிசமான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகியுள்ள பிற மாநிலங்களாக பீகாரில் 6,799 வழக்குகள் (13.16 சதவீதம்), ஒடிசாவில் 3,576 வழக்குகள் (6.93 சதவீதம்), மற்றும் மகாராஷ்டிராவில் 2,706 வழக்குகள் (5.24 சதவீதம்) உள்ளன.
2022 ஆம் ஆண்டில் பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவான மொத்த வழக்குகளில் சுமார் 81 சதவிகிதம் ஆனது இந்த ஆறு மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு எதிரான கொடுமை குறித்த பல வழக்குகளில் பெரும்பாலானவை 13 மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன என்பதை இந்த அறிக்கை மேலும் எடுத்துரைக்கிறது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சம்பந்தப்பட்ட சுமார் 9,735 வழக்குகளில், மத்தியப் பிரதேசத்தில் 2,979 வழக்குகள் (30.61 சதவீதம்) பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து இராஜஸ்தானில் 2,498 வழக்குகள் (25.66 சதவீதம்), ஒடிசாவில் 773 வழக்குகள் (7.94 சதவீதம்) பதிவாகியுள்ளன.