TNPSC Thervupettagam

2022 பனிக்கால ஒலிம்பிக் சின்னங்கள்

December 17 , 2017 2533 days 952 0
  • 2022 பெய்ஜிங் பனிக்கால ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்களை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கான உத்வேகம் சீனாவின் கையெழுத்து வேலைப்பாட்டிலிருந்து வந்துள்ளது.
  • 2008 ஒலிம்பிக் போட்டியை நடத்திய பெய்ஜிங் முதன் முறையாக கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையை பெற உள்ளது.
  • லின் கன்ஜென் என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இந்த சின்னம் சீனக் கலாச்சாரத்தின் பழைமையான மற்றும் புதுமையான மூலக்கூறுகளை ஒருங்கிணைப்பதோடு, பனிக்கால விளையாட்டுகளின் முக்கியத்துவம் மற்றும் உணர்வுகளை வெளிக்காட்டும் விஷயங்களையும் ஒருங்கிணைக்கிறது.
  • பனி அல்லது குளிர் எனப் பொருள்படும் என்ற சீன எழுத்தில் ஆன இந்தச் சின்னம், மேற்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு வீரரையும் அடிப்பகுதியில் வானில் பறப்பவரையும் பிரதிபலிக்கிறது.
  • மேற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் நடுவில் உள்ள பறக்கும் நாடா என்ற மையக் கருத்து, சீனாவின் உருண்டு திரண்ட மலைகளையும், ஒலிம்பிக் நடக்கும் இடங்களையும், பனிச்சறுக்கு கட்டைகளையும், பனிச் சறுக்கு வவளையங்களையும் குறிப்பிடுகிறது.
  • மேலும் இந்த சின்னம், ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் காலம் சீனாவின் புத்தாண்டு ஆரம்பிப்பதோடு ஒத்துப் போவதையும் குறிப்பிடுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்