மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், HCL பெருநிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, இந்திய உருக்கு ஆணையத்தின் தலைவர் சோமா மோண்டல் மற்றும் பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா ஆகியோர் ஃபோர்ப்ஸின் வருடாந்திர ‘உலகின் சக்திவாய்ந்தப் பெண்கள்’பட்டியலில் இடம் பெற்ற 100 பேரில் நான்கு பேர் இந்தியர்களாவர்.
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பணியாற்றிய நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தினை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக பணி புரியும் கிறிஸ்டின் லகார்ட், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உள்ளனர்.